நாடாளுமன்றத்தில் திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா முன்வைத்த புகாருக்கு, திமுக எம்.பி. ஆ.ராசா மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். 1971 பாகிஸ்தான் போர் மற்றும் 1999 கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிக நிதி வழங்கிய கட்சி திமுக தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தேசியவாதம் குறித்து திமுகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கர்ஜித்தார்.

​மாநில சுயாட்சியை மதிக்காமலும், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிக்கும் போது மட்டுமே தங்களது அடையாளத்தைப் பாதுகாக்கக் குரல் கொடுப்பதாக அவர் விளக்கமளித்தார். தேஜஸ்வி சூர்யாவின் தவறான குற்றச்சாட்டுகளைப் புள்ளிவிவரங்களுடன் ஆ.ராசா முறியடித்த விதம் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.