
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் போக்கு காரணமாக இரண்டு நாட்டினரும் தங்கள் தரப்பு தூதர்களை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலமாக பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட ஒத்துழைப்பின் எதிரொளியாக திரும்ப அழைக்கப்பட்ட தூதர்களை மீண்டும் பணியமர்த்த இரண்டு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.