பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு இதே பகுதியில் நடந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு பாலூஸ் விடுமுறை முன்னணி பொறுப்பேற்று கொண்ட நிலையில் தற்போது நடந்துள்ள தாக்குதலுக்கும் அந்த அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.