தமிழகத்தில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமாக அதிக டிக்கெட் வழங்கும் பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு விரைவு பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் qr குறியீடு ஆகியவற்றின் மூலமாக பணம் செலுத்தி பயண சீட்டு பெறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் இந்த முறையில் அதிகபட்ச மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் கண்டக்டர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.