
பவன் கல்யாணை நேரில் பார்ப்பதற்காக அவரது கட்சி அலுவலகத்திற்கு பெண் அகோரி நாகசாதுவால் சென்றார். அவர் நிர்வாணமாக சென்றதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அந்த கட்சியினர் துணை முதல்வர் வெளியூர் சென்றிருக்கிறார் என கூறி தன்னை ஏமாற்றுவதாக அந்த பெண் அகோரி குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த பெண் அகோரியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் அகோரி காளஹஸ்தி கோவிலுக்கும் நிர்வாணமாக சென்று சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.