2003 ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு இரண்டிற்கும் இடையிலான பலன் விகிதம் மாறுபடுவதால் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சில அகில இந்திய சேவைகள் ஏ ஐ எஸ் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆனது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதாவது ஜூலை 13ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி ஏஐஎஸ் பிரிவு சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விண்ணப்பித்துக் கொள்ள முடியும். இதற்கு நவம்பர் 30 கடைசிநாள். இதற்கு சில விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர்22, 2003 அன்று nps பிரிவுக்கு  முன்னதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களாக இருக்க வேண்டும். ஜனவரி 1, 2004 அன்று அல்லது  அதற்கு பிறகு வேலையில் சேரும்போது என் பி எஸ் இன் கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.