பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், அந்த அணியின் தொடக்க வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சாஹிப்ஜாதா ஃபர்ஹான் இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஸ்மித் ஒரு ரன் எடுக்க முயல, எதிர்முனையில் இருந்த ஃபர்ஹான் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஸ்மித் மைதானத்திலேயே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Sahibzada Farhan has taken revenge on Steve Smith for insulting Bobby in BBL
— Jalal Haider (@jalalbalti) April 5, 2026
இந்தச் சம்பவத்தை ரசிகர்கள் கடந்த ஜனவரி மாதம் பிக் பேஷ் லீக் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாமுக்கு ரன் கொடுக்க மறுத்த சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். “அன்று பாபர் அசாமை அவமானப்படுத்திய ஸ்மித்திற்கு, இன்று அதே பாணியில் ஃபர்ஹான் பதிலடி கொடுத்துவிட்டார்” என பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், ஸ்மித் இந்தப் போட்டியில் 53 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பெஷாவர் சால்மி அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி எப்படி செயல்படப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
