அணில் போன்ற சிறிய வகை விலங்குகள் பெரும்பாலும் பழங்கள் மற்றும் விதைகளையே உண்ணும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு அணில் ஒரு ஓணானை (பல்லி போன்ற உயிரினம்) வேட்டையாடி மிகவும் ஆக்ரோஷமாகத் தின்று கொண்டிருக்கிறது. இந்த தத்ரூபமான காட்சிகள் ஏதோ ஒரு திகில் படத்தில் வரும் காட்சியைப் போலவே பயமுறுத்துவதாக உள்ளது.
View this post on Instagram
“>
பொதுவாக இது போன்ற விசித்திரமான காட்சிகள் ஏதேனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என்று பலர் சந்தேகித்தனர். ஆனால், இது உண்மையான காட்சி என்றும், இது ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அணில்கள் ஒரு சில நேரங்களில் சந்தர்ப்பவாத அனைத்துண்ணிகளாக செயல்படும் என்றும், புரதத் தேவைக்காக சிறிய பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றை உண்ணும் என்றும் விலங்கியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அமானுஷ்யமாகவும், இயற்கையின் விசித்திரமான பக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
