ஐக்கிய அரபு அமீரக அரசானது பல துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போர் 10 வருடங்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். முன்னதாக கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா, காஜல் அகர்வால், மீரா ஜாஸ்மின், பாவனா, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் உட்பட பலர் கோல்டன் விசா பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்தநடிகை லதா இப்போது கோல்டன் விசா பெற்று உள்ளார். திரையுலகில் 50 ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இந்த விசாவை அவருக்கு வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.