டெல்லியின் முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி கட்டிடத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுமார் 250 மாணவர்கள் இருந்த நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக குவித்தனர். இந்த விபத்தில் 61 மாணவர்கள் காயமடைந்தனர். அந்த பயிற்சி மைய கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் டெல்லி கல்வித்துறை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதிய தீ பாதுகாப்பு விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி அனைத்து தனியார்,உதவி பெறாத மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் மேலாளர்களுக்கும் தீ NOC, தண்ணீர் சோதனை அறிக்கை, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளிகள் மட்டுமே கல்வி வாரியத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.