தற்போது மக்களின் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் பான் கார்டு. இதில் வங்கி எண் மற்றும் வருமான வரி கணக்கு என அனைத்தும் இணைக்கப்பட்டு இருக்கும். அதனால் பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களிடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் உங்கள் மீது நடவடிக்கையும், அபராதமும் எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நீங்கள் பான் கார்டு அப்ளை செய்துவிட்டு அது சரியான நேரத்தில் வராமல் இருந்தால் நீங்கள் மற்றொரு முறை பான் கார்டு அப்ளை செய்திருக்கலாம்.

அதனால் உங்களிடம் இரண்டு பான் கார்டு இருக்கும். அதனைப் போலவே திருமணத்திற்கு பிறகு தங்களுடைய தந்தை பெயரை மாற்ற வேண்டும் என்றால் பெண்கள் அதே பேன் எண்ணில் மாற்றாமல் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் இப்படி இரண்டு பான் கார்டு இருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் மோசடி செய்பவர்களும் இரண்டு பான் கார்டு வைத்திருப்பார்கள். எனவே அதை கையில் வைத்துக் கொள்ளாமல் உடனே சரண்டர் செய்ய வேண்டும்.

இதற்கு பான் கார்டு மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதில் நீங்கள் பயன்படுத்தும் பான் கார்டு எண்ணை பதிவிட வேண்டும். அதன் பிறகு இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை கொடுக்க வேண்டும். அதன் நகலையும் இணைத்து NSDL வெப்சைட்க்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஆஃப்லைனில் சரண்டர் செய்ய படிவம் 49 A நிரப்ப வேண்டும். எனவே இதை செய்யாமல் இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.