இன்றைய டிஜிட்டல் உலகில் தினந்தோறும் விதவிதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. சில வீடியோக்கள் சிரிப்பை வரவழைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை ஒரு நிமிடம் பதற வைத்துள்ளது.

இந்த வீடியோவில் , முதியவர் ஒருவர் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பல் வலி போலிருக்கிறது. அங்கிருக்கும் மற்றொரு நபர், பல்லை எடுப்பதற்காக ஒரு வினோதமான மற்றும் ஆபத்தான முறையைக் கையாள்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Neto Sidonio (@sid.nas)

சாதாரண நூலைக் கட்டியோ அல்லது இடுக்கியைப் பயன்படுத்தியோ பல் எடுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நபர் கையாண்ட முறை கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அந்த முதியவரின் பல்லைப் பிடுங்க அவர் ஒரு வினோத கருவியைப் பயன்படுத்திய விதம், பார்ப்பவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துள்ளது.  ‘sid.nas’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்:

“பாவம் அந்த முதியவர், அவருக்கே தெரியாமல் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். “யாராவது இப்படித்தான் பல்லை எடுப்பார்களா? இது விளையாட்டல்ல, உயிருக்கே ஆபத்தானது” என மற்றொருவர் எச்சரித்துள்ளார். இன்னும் சிலரோ, “அந்தப் பெரியவருக்கு ஏதோ விளையாட்டு நடந்துவிட்டது” என வேடிக்கையாகக் கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.