
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.