டெல்லியில் இளைஞர்கள் இருவர் தங்களின் ஸ்கூட்டியில் ஆபத்தான முறையில் சாகசங்களைச் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாகச் சென்ற அந்த இளைஞர்கள், சாலையில் வளைந்து நெளிந்து ‘ஜிிக்-ஜாக்’ முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியை டெல்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பொதுமக்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் 18 விநாடி வீடியோ, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விபரீதங்களை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது. டெல்லி காவல்துறை அந்தப் பதிவில், “ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? கவனமாக வாகனம் ஓட்டுங்கள், பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளது.

“>

இந்நிலையில் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் தங்களின் உயிரோடு விளையாடக் கூடாது என்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.