ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026-ன் சமீபத்திய தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த காலத்தை விட தற்போது இந்தியா 75-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது சர்வதேச பயண சுதந்திரம் மற்றும் விசா இன்றி பயணிக்கும் வசதிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இதன் மூலம் இந்திய குடிமக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் 56 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது ‘ஆன் அரைவல் விசா’ வசதியுடன் பயணம் செய்ய முடியும்.
இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிற நாடுகளுடனான வலுவான ராஜதந்திர உறவுகள் காரணமாக இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த முன்னேற்றம் சர்வதேச அளவில் இந்தியர்களின் சுற்றுலா, வணிகம் மற்றும் கல்வி சார்ந்த பயணங்களுக்கு பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
