கேரளாவைச் சேர்ந்தவர் 41 வயது கூலித்தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவி மற்றும் 17 வயது மகள் உட்பட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து அளித்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும் கடந்த ஏழு வருடங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தைக்கு பல பிரிவுகளின் 104 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.