வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன் காரணமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டுமே துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி தன்னுடைய தொடக்கத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்தையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இது பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் ஆடும் ஆட்டம் என்பதால் இப்போதே ரசிகர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த அணியை சாதாரண அணியாக நினைத்துக் கொண்டு விளையாட்டினாலே வெற்றி பெறலாம் என்று முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போதெல்லாம் அது ஸ்பெஷல் போட்டியாக தான் இருக்கிறது. ஏனெனில் அதை சுற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் வீரர்கள் நீங்கள் மிகவும் அமைதியாக இருந்து சத்தங்களை தடுத்து ஆஸ்திரேலியாவை அல்லது மற்ற ஏதேனும் அணிக்கு எதிராக விளையாடுவது போல சாதாரணமாக நினைத்து விளையாட வேண்டாம்.
இந்த முறை பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். பாபர் அசாம் கடந்த முறையை விட தற்போது முதிர்ச்சியை கொண்ட டாமினிக் செய்யக்கூடிய ஒரு வீரராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு அவரைப்போல பகார் ஜாமான் போன்ற வீரர்களின் பேட்டிங்கும் முக்கியமாகும்” என்று அட்வைஸ் கூறியுள்ளார்.
