
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் அருகே ரவுடி அன்பரசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அன்பரசன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவரது உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி பரிவேட்டை விழா தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.