திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றம் திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்பாக வந்து செல்வார்கள். எப்போதும் அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படும். நீதிமன்ற வளாக வாசலில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சோதனை செய்த பிறகு மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக மாயாண்டி என்ற வாலிபர் வந்தார். அப்போது 7  பேர் கொண்ட கும்பல் நீதிமன்ற வளாகத்திலேயே மாயாண்டியை விரட்டியது.

அவர் உயிருக்கு பயந்து நீதிமன்ற வாசலுக்கு ஓடினார். ஆனாலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் துரத்தி சென்று வாசலில் வைத்து மாயாண்டியை படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மாயாண்டின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.