
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள ஷம்ஷாபாத் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றி, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து 30 வயது கொண்ட ஒரு நபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. விவசாய வேலைக்கு தனது தந்தையுடன் சென்ற சிறுமியை 30 வயதான சிவா என்ற நபர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். அச்சத்தால் அமைதியாக இருந்த அவளை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பின்னர் கர்ப்பமாகியதை அறிந்த சிறுமி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், கோத்தூர் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளான். பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் கிராம முக்கியஸ்தர்களை கூட்டி பேசி இதனை மறைக்க முயற்சித்தார். ஆனால், சிறுமியின் குடும்பத்தினர் ஷம்ஷாபாத் போலீசில் புகார் செய்தனர்.
மேலும் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை விரைந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.