பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரிட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் குமார் மற்றும் மஞ்சீத் குமார் ஆகிய இரு சகோதரர்கள் தங்களது உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட போது, அங்கு புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.

மேலும் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனால் முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக நிலவி வந்த முன்விரோதமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருமண விழா, துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மரண ஓலத்துடன் சோகத்தில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.