கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று (நவ.19) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையானது. இந்த விலையேற்றம் சில மணி நேரங்களில் மீண்டும் எதிரொலித்தது. இதன் காரணமாக, 22 கேரட் தங்கம் மீண்டும் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,600-க்கும், சவரன் ₹92,800-க்கும் விற்பனையாகிறது. இதனால், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 வரை விலை உயர்ந்திருப்பது நகை வாங்கும் எண்ணத்தில் இருந்தோரை கவலையடையச் செய்துள்ளது.