உகாண்டாவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உகாண்டா தலைநகர் காம்பாலா வடக்கு நகரமான குலுவிற்கு இடையே உள்ள ஹைவேயில் நடந்த இந்தக் கோர விபத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் 63 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். கார் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த பஸ் மீது மற்றொரு பேருந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Gugudde TV Uganda (@guguddetvuganda)