நெடுஞ்சாலையில் கடும் புழுதிப் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒரு குடும்பம் தனது வாகனத்தில் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தது. பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்த அந்தச் சூழலில், அவர்களது கார் நகர முடியாதபடி சிக்கிக்கொண்டது. அச்சத்தில் இருந்த அந்த குடும்பத்திற்கு, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த ஒரு கார் வந்து நின்று உதவியது.

மேலும் அந்த காரில் இருந்த நபர், பெரும் ஆபத்தை பொருட்படுத்தாமல் முன்வந்து, புயலில் சிக்கித் தவித்த குடும்பத்திற்கு பாதுகாப்பாக உதவினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

“>

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி, பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இக்கட்டான சூழலில் மற்றவர்களுக்கு உதவும் மனிதாபிமானத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றியுள்ளது.

இந்நிலையில் பெரும் புயலுக்கு மத்தியிலும், ஒரு அந்நியர் காட்டிய இந்த அக்கறை, சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தகவல், மனிதநேயம் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.