பெங்களூரின் ஆர்.டி. நகர் பகுதியில் 21 வயது டெலிவரி ஏஜென்ட் குமார் என்ற இளைஞர், பிரேசில் மாடல் ஒருவரை தவறாகத் தொட்டதாக கைது செய்யப்பட்டார். அவர் பகுதி நேர டெலிவரி வேலை செய்து, தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அக்டோபர் 17 அன்று மாடல் மளிகை ஆர்டர் செய்தபோது, அவர் தனியாக இருப்பதை அறிந்து தவறாக நடந்து கொண்டார்.
மாடல் எதிர்ப்பு தெரிவித்தும் குமார் தொடர்ந்து தவறாகத் தொட்டார். பயந்து போன அவர் கத்தி, அறையைப் பூட்டிக்கொண்டு முதலாளியை அழைத்து உதவி கேட்டார். பின்னர் போலீசில் புகார் அளித்ததால், குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். டெலிவரி நிறுவனமும் அவரை வேலையிலிருந்து நீக்கியது.
சில நாட்களுக்கு முன், பெங்களூருக்கு அருகே மேற்கு வங்காள பெண் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். இரவு 9:30 முதல் 12:30 வரை நடந்த இச்சம்பவத்தில், ரூ.25,000 பணமும் இரண்டு மொபைல்களும் திருடப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தனியாக வசிக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
