ஸ்விகியில் ஆர்டர் செய்த ‘அமுல் தாசா’ பால் பன்னீர் செய்யப் பயன்படவில்லை என்றும், அது கலப்படமானதாக இருக்கலாம் என்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வெளியிட்ட காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தாங்கள் வீட்டிலேயே பன்னீர் செய்ய முயன்றபோது பால் திரியவில்லை என்று அவர் குற்றம் சாட்டிய நிலையில், மற்றுமொரு வகை பாலை வைத்து அவர் செய்த சோதனையில் பால் எளிதாகத் திரிந்ததைச் சுட்டிக்காட்டி அந்தப் பாலை ‘போலி’ என்று பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
“>
இந்தக் காணொளிக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் பன்னீர் செய்வதற்கு முழு கொழுப்புள்ள பால் தேவை என்றும், ‘அமுல் தாசா’ போன்ற கொழுப்பு குறைந்த பாலில் பன்னீர் கிடைப்பது கடினம் என்றும் தொழில்நுட்ப ரீதியாக விளக்கம் அளித்து வருகின்றனர்.
