பீகாரின் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரின் தாய், பேராசையினால் தனது மகளை 16,000 ரூபாய் மற்றும் 10 புடவைகளுக்கு ஒரு நடுத்தர வயதுடைய நபரிடம் விற்றுள்ளார். இந்த கொடூரமான செயலைச் செய்த அந்தத் தாய், சிறுமியை விற்பனையாளரிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

மேலும் அந்த சிறுமி, விற்கப்பட்ட நபரின் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் கொடூரமான சித்திரவதைகளுக்கும் உள்ளாகி, நரக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியைத் துன்புறுத்திய அந்த நபர், பின்னர் அவரை வாரணாசி ரயில் நிலையத்தில் கைவிட்டுச் சென்றுள்ளார். அங்கு வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், சிறுமியைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்று, அவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இறுதியில் சிறுமியை சாலையோரம் வீசிவிட்டுச் சென்றார். அழுதுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய், அவரை வாங்கிய நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் என மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.