ஒபலி என்.கிருஷ்ணா டைரக்டில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிப்பில் சென்ற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “பத்து தல”. நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகியது.

இதனிடையே “பத்து தல” படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்து உள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.