பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீசாகி 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள நிலையில், ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் விரைவில் 1000 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பதான் திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் அவருடைய அண்ணன் மகளும் நடிகையுமான சுகாசினி, சோபனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருடன் சேர்ந்து பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பதான் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது உலகநாயகன் கமல்ஹாசன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.