மும்பையின் மஸ்கான் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது முட்டைகள் வீசப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அங்கு பெரும் பதற்றமும் வாக்குவாதமும் வெடித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அமைதி காக்குமாறும் சட்டம் தன் கடமையைச் செய்ய ஒத்துழைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

மஸ்கான் சா மோரியா கணபதி ஊர்வலம் பந்தலில் இருந்து 30 முதல் 40 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து முட்டைகள் வீசப்பட்டதாக மண்டல் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் விநாயகர் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அப்பகுதியில் அதிகளவிலான மக்கள் திரண்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சம்பவ இடத்தில் திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த மூத்த காவல் அதிகாரி ஜெயந்த் மீனா தலைமையிலான போலிஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பாமல் அமைதி காக்க வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மும்பை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விபரீதத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ANIKET MANJREKAR 😎 (@bollywood_photographer)

“>

இதனிடையே, மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் 22 அடி உயர விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டபோது அது தவறி கீழே விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சோகச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று தொடங்கவுள்ள நிலையில், மும்பையில் மட்டும் ஆயிரக்கணக்கான மண்டல்கள் நிறுவப்பட்டு பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.