மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதி சேவைகள் துறை வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் எண்ம பரிவர்த்தனையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது யு.பி.ஐ சேவை மூலம் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.12.82 லட்சம் கோடி பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் ரூ.12 லட்சம் கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.11.90 லட்சம் கோடியும் பண பரிவர்த்தனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த சேவையை 381 வங்கிகள் வழங்கி வருவதனால்  மாதம் தோறும் இதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.