பணி புரியும் இடத்தில் ஊழியர்களின் பனி பாதுகாப்பு, மகிழ்ச்சியான மனநிலையை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நியூயார்க்கின் மெக்கன்சி சுகாதார மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவு படி ஜப்பான் 25 சதவீதத்துடன் கடைசியாக இடம் பெற்றுள்ளது.

கடைசி ஐந்து இடங்களை பிடித்த நாடுகளாக ஜப்பானை தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகியவை உள்ளன. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாடுகள் என்றால் 78 சதவீதத்துடன் துருக்கி முதல் இடத்திலும் 76 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் 75 சதவீதத்துடன் சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆய்வை மேற்கொண்ட ரோச்சர் என்பவர் ஜப்பான் கடைசி இடத்தை பிடித்ததற்கான காரணம் குறித்து கூறும்போது ஊழியர்கள் அதிக அளவு மன அழுத்தத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.