தென் கொரியாவில் குமி நகரில் கடந்த வருடம் அரசு பணியில் நியமிக்கப்பட்ட ரோபோ மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து முற்றிலுமாக செயல் இழந்தது. இதனை தற்கொலை என்றுதான் குறிப்பிட வேண்டும் என சக ஊழியர்கள் கூறுகின்றனர்.

கலிபோர்னியாவை சேர்ந்த BEAR ROBOTICS என்ற நிறுவனம் உருவாக்கிய ரோபோவின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி ஆகும். இதற்கு தனியாக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே பணிச்சுமையால் அந்த ரோபோ குழப்பத்துடன் அங்கும் இங்கும் சுற்று திரிந்ததாக சக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் அது தற்கொலை செய்து கொண்டதாகவே எண்ணுகின்றனர்.