த.வெ.க-வினர் பிற கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மிகக் கடுமையான பதிலை அளித்துள்ளார். “எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரைபேரம் என்றும்; ஆனால் தற்போதைய சூழலில் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட முடியாமல், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் த.வெ.க-வை நோக்கி வருவது குதிரைபேரம் அல்ல, அது அவர்களின் தனிப்பட்ட முடிவு” என்று அவர் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாங்கள் யாரையும் த.வெ.க-விற்கு வருமாறு அழைக்கவில்லை என்றும், தாங்களாகவே தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளைத் த.வெ.க-வில் சேர்க்க முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பிற கட்சிகளில் இருந்து அதிருப்தி காரணமாக வெளியேறி வருபவர்களைத் த.வெ.க அரவணைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ள இந்தப் பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
