பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றி அவதூறு பரப்புவதற்காகத் தனக்கு பெரும் தொகை கொடுக்க முன்வந்ததாக அவரது முன்னாள் காதலியும் நடிகையுமான ஜெய் அட்கின்சன் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் ரொனால்டோவுடன் தான் உறவில் இருந்தபோது, அவரைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை ஊடகங்களில் பகிர்ந்தால் பல லட்சம் ரூபாய்கள் தருவதாகப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பணத்திற்காக ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசத் தான் விரும்பவில்லை என்று கூறி, அந்த வாய்ப்புகளைத் தான் நிராகரித்துவிட்டதாக அவர் தற்பொழுது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரொனால்டோவை விட்டுப் பிரிந்த பிறகும் கூட, அவரைப் பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பல பத்திரிகைகள் தன்னைத் தொடர்ந்து அணுகியதாக ஜெய் அட்கின்சன் கூறியுள்ளார். ரொனால்டோ ஒரு சிறந்த மனிதர் என்றும், அவருடன் பழகிய காலம் மிகவும் கண்ணியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் மற்றவர்கள் விரித்த பண வலையில் தான் விழவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரொனால்டோவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் திட்டமிட்டுச் சிலர் செயல்படுவதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
