தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் நுணுக்கமான வியூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விஜய்யை வெறும் சினிமா நட்சத்திரமாக மட்டும் காட்டாமல், ஒரு முதிர்ச்சியுள்ள மக்கள் தலைவராக நிலைநிறுத்த அவர் பல திட்டங்களை வகுத்தார்.
குறிப்பாக, 234 தொகுதிகளிலும் ரகசிய கள ஆய்வுகள் நடத்தி, மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டது மற்றும் கல்வி விருது விழாக்கள் மூலம் மாணவர்களிடையே விஜய்க்கு நற்பெயரை உருவாக்கியது என ஜானின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாகச் செயல்பட்டன.
நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, இளைஞர்களையும் நடுநிலை வாக்காளர்களையும் தவெக பக்கம் ஈர்க்கும் பணிகளை அவர் மேற்கொண்டார். சமூக ஊடகங்கள் மூலம் “தூய்மையான அரசியல்” என்ற முழக்கத்தைக் கொண்டு சென்றதுடன், குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்களைத் தேர்வு செய்ததிலும் அவர் கண்டிப்பு காட்டினார்.
பண பலத்தை விட தொண்டர்களின் களப்பணியை நம்பி அவர் வகுத்த இந்த “சைலண்ட்” வியூகங்கள் தான், தமிழக அரசியலில் தவெக-வை ஒரு வலுவான மாற்றாக உருவெடுக்கச் செய்துள்ளது.
