இந்தியாவில் எத்தனையோ விசித்திரமான கிராமங்கள் இருந்தாலும், மகாராஷ்டிராவின் அஹில்யா நகர் (முன்னாள் அகமது நகர்) மாவட்டத்தில் உள்ள ‘ஹிவாரே பஜார்’ (Hiware Bazar) கிராமம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்த ஊரின் மிகப்பெரிய சவாலே இதுதான் – உங்கள் கண்களில் ஒரு கொசு தென்பட்டு, அதை நீங்கள் பிடித்துக் காட்டினால், ஒவ்வொரு கொசுவிற்கும் தலா 400 ரூபாய் பரிசு வழங்கப்படும். அந்த அளவுக்குக் கொசுக்களே இல்லாத தூய்மையான கிராமமாக இது திகழ்கிறது.

80-களில் கடும் வறுமையிலும் வறட்சியிலும் வாடிய இந்தக் கிராமம், இன்று இந்தியாவின் முன்மாதிரி கிராமமாக மாறியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 305 குடும்பங்களில், சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள் என்பதுதான் ஹைலைட்.

முறையான நீர் மேலாண்மை, மின்சார சேமிப்பு மற்றும் கிராம மக்களின் ஒற்றுமையால் இன்று இந்த ஊரில் ஒரு ஏழை கூட இல்லை. சுற்றுலாப் பயணிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் வியந்து பார்க்கும் இந்தக் கிராமம், “முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம்” என்பதற்குப் பாடமாக அமைந்துள்ளது.