உத்தரபிரதேசத்தின் பான்பூர் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அங்கு சிறிய விபத்து காரணமாக ஒரு பெண், கேப் டிரைவரை நடுவழியிலேயே மோசமாக தாக்கியுள்ளார். சாலையில் ஏற்பட்ட சிறிய மோதலை தொடர்ந்து அந்த பெண் மிகுந்த கோபமடைந்து, கேப் டிரைவரை அடிக்கத் தொடங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த ஆண்கள் எவரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. இதனால் கேப் டிரைவர் உதவி இல்லாமல் அவதிப்பட்டார்.
சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவில், அந்த பெண் கோபத்தின் உச்சத்தில் கேப் டிரைவரின் மீது ஹெல்மெட்டால் அடி கொடுத்தது தெளிவாகப் பதிவாகியுள்ளது. தாக்குதலால் வலியில் அழுதுகொண்டிருந்த கேப் டிரைவரை பார்த்தும், இரக்கமின்றி அந்த பெண் நிற்காமல் தொடர்ச்சியாக தாக்கியுள்ளார். இதனால் சாலையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில் ஒரு இளம் பெண் அங்கு வந்து அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி கேப் டிரைவரை காப்பாற்றியுள்ளார்.
Kalesh b/w A lady and a cab driver over an silly accident,Bhanpur
pic.twitter.com/Mi2sxtWw9h— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 30, 2025
“>
இந்த சம்பவத்துக்குப் பிறகு கேப் டிரைவர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஆனால், தாக்கிய பெண் அங்கிருந்தபடியே சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் வெளியாகியதும், இணையத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
