திருமணத்தில் கணவன்–மனைவி பிரிவதன் பாதிப்பு இருவருக்கும் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் அவர்கள் மனரீதியாக சிதைந்து விடுகிறார்கள். இருந்தபோதிலும் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இதற்குச் சாட்சியாக உள்ளது. அதில், ஒரு மனைவி தனது காதலனுக்காக கணவனை விவாகரத்து செய்தபோது,
அந்தக் குழந்தைகள் தாயைத் தடுக்க முயன்றும், அவள் அவர்களைத் தள்ளி விட்டு விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பெரும் வருத்தத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பிரிவுத் தீர்மானம் எடுக்கப்பட்ட தருணத்தில், தந்தையைக் கைவிடும் தாயைக் கண்ட குழந்தைகள் தாங்க முடியாமல் அழுதுகொண்டிருப்பது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தாயிடம் கண்ணீர் மல்கக் கோரியும், தந்தையைக் கைவிட வேண்டாம் என்று சொன்ன குழந்தைகளின் கதறல் யார் மனதையும் உருக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அவர்களின் வேண்டுகோளை பொருட்படுத்தாமல் அந்த பெண் தனது முடிவை மாற்றாமல், அவர்களைத் தள்ளி விட்டு விலகிச் சென்றதாக வீடியோவில் காணப்படுகிறது.
Wife Divorce Husband to Stay With Lover; Kids Beg Her Not to Leave !!
.
.#wifelife #divorce #marriedlife pic.twitter.com/bXULkZ7YO3— MissMohini (@MohiniWealth) August 29, 2025
“>
இந்த வைரல் வீடியோ எப்போது, எங்கு பதிவானது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் MissMohini என்ற எக்ஸ் ஹாண்டில் மூலம் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், “கணவன்–மனைவி பிரிவின் போது குழந்தைகள் தாயைத் தடுக்க முயன்றார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பலரும், “குழந்தைகள் மீது எவ்வளவு மோசமான தாக்கம் ஏற்படுகிறது” எனக் கூறி தாயின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
