மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சீருடையணிந்த இரண்டு சிறுமிகள் அரசாங்க மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிய வெளிவந்த வீடியோ பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய அந்த காட்சியில் சிறுமிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு மதுபானம் வழங்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மாநில கல்வித் துறை மற்றும் மதுவிற்பனைத் துறை மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ளன.

சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சிறுமிகள் தனியாகச் செயல்பட்டார்களா அல்லது வேறு யாரேனும் அனுப்பினார்களா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
“விசாரணையில் இந்த விஷயம் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும். மதுபானக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். சிறார்களுக்கு மது விற்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்படுவார். சிறார்களுக்கு மதுபானம் விற்பது உரிம நிபந்தனைகளை கடுமையாக மீறுவதாகும்” என்று மாவட்ட கலால் அதிகாரி கூறினார்.
भाजपा सरकार की शराब की दुकान अब स्कूली छात्राओं तक पहुंच गई है… नियमानुसार नाबालिगों को शराब नहीं बेची जा सकती है लेकिन शराब प्रेमी सरकार यह भी कर गुजरना चाहती है। pic.twitter.com/9yOStqNOvW
— Ravindra Sahu Jhoomarwala (@RavindraSahuINC) October 25, 2025
“>
உள்ளூர்வாசிகள் கடை உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், நிர்வாகத்திடம் இருந்து பொறுப்புக்கூறலை கோரியுள்ளனர், சிறார்களுக்கு எப்படி இவ்வளவு வெளிப்படையாக மது வாங்க அனுமதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சர்ச்சை அரசியல் ரீதியாக மாறியது.
சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
