
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக பெட்ரோல் பங்குக்கு செல்லவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதிலும் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அப்போது தான் அவரை கடம்பூர் அருகே மர்ம நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது சங்கிலி இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே ஒரு கார் மற்றும் பைக் போன்றவைகள் இருந்தது. இவர் வேலைக்கு செல்லும் போது எதிரே வந்த கார் வேண்டும் என்றே இவரின் பைக் மீது மோதியுள்ளது. இதில் பைக்கில் இருந்து சங்கிலி தூக்கி வீசப்பட்ட நிலையில் பின்னர் காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து அவரை வெட்டி படுகொலை செய்தனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சங்கிலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.