உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள நகைக்கடையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் 3.30 மணியளவில் நடந்த அதிரடியான கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் போல் மாறுவேடம் போட்ட இருவர், ஹெல்மெட் அணிந்து கடையில் நுழைந்து, நகைகளை எடுத்துவைத்து பைகளில் நிரப்பிய பிறகு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் முழு காட்சி கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

“>

 

இவ்வாறான தைரியமான கொள்ளையில், சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கண்முன்னே நடந்த இந்த கொள்ளை சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தரும் வீடியோவுடன் பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் அதிக  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.