குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 64.62 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 70.62% மாணவிகளும், 59.58 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1084 பள்ளிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.