டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இந்தியாவில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிக கட்டணம் ஏதும் இன்றி மொபைல் வாயிலாக யாருக்கும் ஈஸியாக பணம் செலுத்தலாம். கூகுள் பே-ல் வங்கிகளின் UPI கட்டண வரம்பு எவ்வளவு என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். SBI வங்கிக்கணக்கில் தினசரி UPI வாயிலாக நாம் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம்.

HDFC வங்கியில் UPI பரிவர்த்தனை வரம்பானது ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் புது வாடிக்கையாளர்களுக்கு இந்த வரம்பு ரூ.5,000. icici வங்கி வாடிக்கையாளர்கள் ரூபாய்.10,000 வரையிலும் UPI பரிவர்த்தனைகளை செய்யலாம். எனினும் கூகுள் பே பயனர்களுக்கு இந்த வரம்பு ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆக்சிஸ் வங்கி UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.1 லட்சமாக வரையறுத்து உள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா வாயிலாக UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு அமேசான் பே, UPI வழியே ரூ.1,00,000 அதிகபட்ச பணப்பரிமாற்ற வரம்பை நிர்ணயித்து உள்ளது. குறிப்பிடத்தக்க அடிப்படையில் Amazon Pay UPI-க்கு பதிவுசெய்த முதல் 24 மணி நேரத்தில் பயனர்கள் INR 5,000 வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும். வங்கியை பொறுத்து நாளொன்றுக்கு 20 பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது வரையறுக்கப்பட்டு உள்ளது.