உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் தீபாளி என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு 15 வயதாகிறது. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க தேர்வு செய்யப்பட்ட 30 மாணவர்களுள் தீபாவளியும் ஒருவர்.

இவருடைய தந்தை சலவை தொழிலாளி. இந்நிலையில் தீபாளியின் தந்தைக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அதன் பின்படுத்த படுக்கையாக வீட்டில் இருக்கிறார். இதனால் அவருடைய தாயார் மட்டும் வேலை பார்த்து வரும் நிலையில் தீபாளி வீட்டில் டியூஷன் எடுத்து தன் அம்மாவுக்கு உதவி செய்து வந்தார். மேலும் அவர் கடினமான சூழலிலும் படித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.