கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரஜிதா ரெட்டி (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா ரெட்டி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ரஜிதாவின் கணவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறார். இவர் வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு சென்று விட்ட நிலையில் ரஜிதா மற்றும் ஸ்ரீஜா இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர்.

அப்போது ஸ்ரீஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ரஜிதா படுக்கையறைக்கு வந்தபோது தன்மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்து கதறி அழுத ரஜிதா உடனடியாக தன் கணவனுக்கு தொடர்பு கொண்டு மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் என் மகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது எனவும் கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு உடனடியாக கிளம்பினார். அவர் வீட்டிற்கு வந்த நிலையில் ரஜிதாவும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தாய்மகள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இளம் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகள் இறந்த தூக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளின் தற்கொலையில் மர்மம் நீடிப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.