
தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் குறித்து ஆளும் பாஜக கட்சியினரும் அவர்களுடன் கூட்டணிகள் இருப்பவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி அவர்களின் பிரச்சாரம் குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இவ்வாறு தெரிவித்தார்.
அதில், ராமர் கோவிலை காங்கிரஸ் ஆட்சி வந்தால் இடித்து விடுவார்கள் என கூறுகிறார் பிரதமர் மோடி. ஆனால் ராமர் கோவிலை இடித்ததே மோடி தான். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முன்பாக 30 கோவில்களை இடித்தாரா ? இல்லையா ? சின்ன சின்ன கோவில்கள் அயோத்தியை சுற்றி இருந்தன. ஆக அந்த 30 கோவிலை இடித்துவிட்டு பெரிய கோவிலாக அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது. ஒரு பழமொழி ஒன்று கூறுவார்கள். படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோவில். இந்த பழமொழி மோடி அவர்களுக்குத்தான் பொருந்தும் என ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.