இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் குழந்தைகளை தாக்குவது என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்திலுள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை அருகே நேற்று தெரு நாய்கள் பொருள் ஒன்றை கடித்து குதறிக் கொண்டிருந்தன.

இதனை கண்ட காவலர் ஒருவர் நாய்களை விரட்டி விட்டு பார்த்தபோது அது பச்சிளம் குழந்தை என தெரிய வந்தது. குழந்தை உடலின் கீழ்பகுதி இல்லாததால் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று தெரியவில்லை. குழந்தையை அங்கு போட்டு சென்றது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.