திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று மக்கள் ஒரு நம்பிக்கை வைத்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் 26 ஆம் தேதி வரை ப்ரமோற்சவம் விழா தொடங்கப்பட இருக்கிறது. இந்த வருடம் இரண்டு பிரமோற்சவ விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா காலத்தில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமான பக்தர்களுடைய வருகை இருக்கும்.

இதனால் திருப்பதி தேவஸ்தானம், பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும் முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த நாட்களில் நாள்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கியுள்ளதாகவும் இந்த நாட்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து போன்றவை தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பாக அளிக்கப்படும். செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7 மணி அன்று திருப்பதியில் கருட சேவை நடைபெறும் என்பதால்  கோவிலுக்கு பைக்குகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.