ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கார்டு மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அத்யாவசிய பொருட்களை வாங்கி வருகிறார்கள். மேலும் அரசு நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் அட்டைகள் பயன்படுகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பொதுமக்கள் இனி ஒரே மாதத்தில் இரண்டு மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களை பெற்று பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளும் பொது சேவை மையமாக மாற்றப்பட்ட பிறகு ரேஷன் கார்டு தாரர்கள் இரண்டு மாதத்திற்குரிய தங்களுடைய ரேசன் பொருட்களை ஒரே நேரத்தில் வாங்கிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தின் மூலமாக ஆதார் கார்டு புதுப்பிப்பது, பான் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற வசதியையும் பெற்றுக் கொள்ளலாம்.